எறிபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்
மதுரை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனர்.;
கர்நாடக மாநிலம் பெங்களூரு சௌடப்ன ஹள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் டில்லி, கல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநில அணிகள் மோதின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை வேலம்மாள் பள்ளி மாணவி நிஹாரிக தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதேபோல் மாணவர்கள் ராகேஷ், சாஜித் மூன்றாவது இடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் அணி என்ற பட்டத்தை பெற்றனர்.