குமரி மாவட்டம், குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (44). கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 11 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்த சுனில் குமார் மனைவி சென்ற இடத்திற்கு தானும் செல்வதாக கூறி, வீட்டில் உள்ள விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சுனில் குமாரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரின் தந்தை தாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.