குமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (55). இவரது இளைய மகன் அஜின்குமாரும் மனைவி பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாரியம்மாளுக்கும் அஜின் குமார் மனைவி அஸ்வினி என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று மாரியம்மாள் மகன் வீட்டில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்வினி அவரது அக்காள் ஜெனி மோள் ( 32) ஆகியோர் சேர்ந்து மாரியம்மாளை தாக்கியுள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அஸ்வினி மற்றும் ஜெனி மோள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.