கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று தொடங்கியது. பேரூராட்சி தலைவர் எஸ்.செல்வகனி குத்து விளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) சே.சதீஷ் நந்தகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் விமலா மதி, கவுன்சிலர்கள் செல்வன், மற்றும் பொன்முடி, சரோஜா, கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.வைகுண்டபெருமாள், மாவட்ட பிரதிநிதி ஜி.வினோத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன். ஜான்சன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.