கோவை கலெக்டர் அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசாணைப்படி ஊதியம், நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.;

Update: 2025-09-30 10:20 GMT
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணைப்படி ரூ.14,892 ஊதியம் வழங்க வேண்டும் எனவும், 2 ஆண்டுகள் பணி புரிந்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தொகுப்பூதியம், தனியார்மயம் கைவிடப்பட வேண்டும். தூய்மைப் பணி எந்திரமயமாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு கருவிகள், மருத்துவ வசதி, ஓய்வறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு எல்.டி.யு.சி. மாநில துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News