கோவை: அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரி மாணவர்கள் மனு

மாணவர்கள் கல்வி வசதி கோரி மனு – தெருநாய்கள் தொல்லை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.;

Update: 2025-09-30 10:25 GMT
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என மாணவர்கள் மனு அளித்தனர். அப்பகுதியில் 2,700-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தற்போது 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயிலும் நிலையில், பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவலிலிருந்து விடுபட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மனு அளித்துள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் நாய்கள் கூட்டமாக சுற்றி வாகன விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Similar News