குமரி மாவட்டம் சடையமங்கலம் ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு சித்தன்தோப்பு அன்னை சமுதாய நலக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 30-ம் தேதி நடந்தது. கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வுகள் மற்றும் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் முகாம் ஒருங்கிணைப்பாளர்க்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் அவர்கள் வீட்டின் அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று மனுவினை அளித்து தங்களின் தேவைகளுக்கு தீர்வு காண உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுசிலாபாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பலதா, ஜெயா, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் பாண்டிராஜ், வட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.