ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை பார்வையிட்ட ஆட்சியர்
கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். பேத்துப்பாறையில் கொடைக்கானல்-பழனி சாலையில் அமைந்துள்ள கிராமத்தில் ஆதிமனிதன் குகைகள் மற்றும் கற்திட்டைகளும், தாண்டிக்குடி மலைக் கிராமத்திலும் பல ஆதிமனித கற்திட்டைகளும், வெள்ளைப்பாறையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கற்திட்டைகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. இந்த இடங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு ஏதுவாக தேவையான அடிப்படை வசதிகள். மின் விளக்குகள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகிய வசதிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுகரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், உதவி பொறியாளர்கள் தங்கவேல், பாரதி, நவீன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.