வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்
கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் செண்பகனூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் வெவ்வேறு வகையான வனவிலங்குகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், உள்ளூர் பறவைகள், பல்வேறு வகையான பாம்பு வகைகள் மற்றும் பழங்கால நாணயங்களை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து விலங்குகள் மற்றும் பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களும், எலும்புகூடுகளும், தோல்களும் கண்ணாடி ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுகரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், உதவி பொறியாளர்கள் தங்கவேல், பாரதி, நவீன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.