“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்ட அமைச்சர்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொ.கீரனூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்;
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொ.கீரனூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, இடையன்வலசு ஊராட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை மற்றும் கொ.கீரனூர் ஊராட்சியில் ரூ.09.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபட்டுள்ள புதிய நியாயவிலைகடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 20 பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும். 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 1 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சைகாந்தி, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.