தாராபுரத்தில் ரோட்டரி சங்க தலைவர்களுக்கு பயிற்சி
தாராபுரத்தில் ரோட்டரி சங்க தலைவர்களுக்கான ஆளுமை திறன் பயிற்சி இரண்டு நாள் நடைபெற்றது;
தாராபுரத்தில் ரோட்டரி சங்க தலைவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பாலாஜி வரவேற்றார். அகில உலக ரோட்டரியின் பயிற்சி பட்டறையின் துணைத்தலைவர் முன்னாள் கவர்னர் ஜார்ஜ் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி கவர்னர்கள் சிவசங்கரன், சண்முகசுந்தரம், கார்த்திகேயன், ராஜா கோவிந்தசாமி, நடப்பு கவர்னர் தனசேகரன் ஆகிேயார் ரோட்டரியின் பல்வேறு தலைப்புகளில் 2 நாள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 50 பேருக்கு ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் பெத்த பெருமாள், முன்னாள் தலைவர் ராஜ்மோகன், சண்முகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.