பரமசிவம் பாளையத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை
பல்லடம் அருகே பரமசிவம் பாளையத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை வி.பி.கந்தசாமி எம்எல்ஏ பங்கேற்பு;
மங்கலம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு பரமசிவம்பாளையம் பகுதியில், சூலூர் சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16½ லட்சத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்க பூமிபூஜை நடந்தது. இதற்கு சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அ.தி.மு.க.-சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் வினோத், சாமளாபுரம் பேரூராட்சி செயலாளர் வேப்பங்காடுமணி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பேரூராட்சி கவுன்சிலர் மேனகா பாலசுப்பிரமணியம், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூபதி, பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வடிவேல், சாமளாபுரம் பேரூராட்சி பொருளாளர் திருமூர்த்தி, சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், அ.தி.மு.க. சாமளாபுரம் பேரூராட்சி அனைத்து வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்ட னர்.