போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்தல்

கொற்றிகோடு;

Update: 2025-10-01 03:37 GMT
குமரி மாவட்டம் கொற்றிகோடு காவல் நிலைய எஸ்ஐ ராம்சங்கர் தலைமையில் சித்திரங்கோடு சாலையில் போலீசார் வாகன சோலையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்து டாரஸ் லாரியை சோதனை செய்ய கை காட்டிய போது, போலீசாரை கண்ட டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 3 கன மீட்டர் அளவுக்கு கனிம வள ஜல்லி கற்கள் இருந்தன. இதற்கான அனுமதி சீட்டு சோதனை செய்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை கைப்பற்றி கொற்றிகோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனுமதி சீட்டு பரிசோதனை செய்ய புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த ஆய்வில் அவை போலி அனுமதி சீட்டு என்பது தெரிய வந்தது. அதன் பேரில் டிரைவர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News