குமரி மாவட்டம் குலசேகரம், மாமுடு பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வருகிறார். தற்போது அந்த கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சி வழியாக ஆவணங்களுடன் வரைபடம் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த நிலையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்ற போது கூட்டத்தில் அனுமதி வழங்கக் கூடாது என்று இந்து முன்னணியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். இதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் கூட்டத்தில் அனுமதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணியினர் செயல் அலுவலரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.