கோவை பூமார்க்கெட்டில் ஆயுத பூஜை கோலாகலம் !
செவ்வந்தி பூ, வாழை மரக்கன்றுகள் விற்பனை அமோகம்.;
ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூமார்க்கெட்டில் மக்கள் திரளாக வந்து தேவையான பொருட்களை வாங்கினர். வாகனங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு பூஜை செய்ய வாழை மரக்கன்றுகள், செவ்வந்தி பூ மாலைகள், பொறிகடலை, மா இலை, வண்ணத் தோரணங்கள் என பல பொருட்கள் அதிகமாக விற்பனையாகின. மக்கள் திரளால் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டனர். நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. விலை நிலவரத்தில் செவ்வந்தி பூ கிலோ ரூ.240 முதல் ரூ.350 வரை, வாழை மரக்கன்றுகள் ஜோடி ரூ.200-க்கு விற்பனையாகின்றன.