கரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காந்தியடிகள் படத்தை திறந்து வைத்து கதர் விற்பனையை துவக்கி வைத்தார் கரூர் கோட்டாட்சியர்.
கரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காந்தியடிகள் படத்தை திறந்து வைத்து கதர் விற்பனையை துவக்கி வைத்தார் கரூர் கோட்டாட்சியர்.;
கரூரில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காந்தியடிகள் படத்தை திறந்து வைத்து கதர் விற்பனையை துவக்கி வைத்தார் கரூர் கோட்டாட்சியர். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் கதர் விற்பனை கடையில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் துவக்கி வைத்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் திருவுருவப்படத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பருத்தி கதர் பட்டு பாலிஸ்டர் உள்பட அனைத்து உறவுகளுக்கு 30 சதம் வரை தள்ளுபடி வழங்கும் இந்த விற்பனையில் ஆசிரியர்கள்,அரசு அலுவலர்கள் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு 10 மாத தவணை முறையில் எளிய கடன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய விற்பனையை பொதுமக்கள் ஊக்கப்படுத்தும் போது ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கதர் அங்காடி மேலாளர் முத்துசாமி மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.