தென்காசி ரயில் நிலையத்தில் தூய்மை பணி உறுதிமொழி
ரயில் நிலையத்தில் தூய்மை பணி உறுதிமொழி;
தென்காசி மாவட்டம் தென்காசி ரயில் நிலையத்தில் ஸ்வாச்ச்தா ஹாய் சேவா திட்டம் சார்பில், "ஸ்வச் ரெயில், ஸ்வச் பாரத்” என்ற முழக்கத்துடன் தூய்மை பணி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி ரயில் நிலைய அலுவலர் முன்னிலையில் அலுவலர் மற்றும் அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.