அரசு பேருந்தை டிராக்டரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு

வேடசந்தூரில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை டிராக்டரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது;

Update: 2025-10-02 06:36 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அச்சனம்பட்டியில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென எஞ்சின் கோளாறு காரணமாக பழுதாகி நின்றது. அதனைத்தொடர்ந்து பயணிகளை இறக்கி விட்டு, அந்த பேருந்தை வேடசந்தூரில் உள்ள பணிமனைக்கு ஒரு ட்ராக்டரில் கட்டி இழுத்துச் சென்றனர். வேடசந்தூர் நகருக்குள் அரசு பேருந்தை டிராக்டரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேடசந்தூர் பகுதியில் ஓட்டை உடைசல் பேருந்துகள் இயக்கப்படுவதால்,அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் அரசு புறநகர் பேருந்தின் டயர்கள் தனியே கழன்று ஓடிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே வேடசந்தூர் பகுதியில் இயக்கப்படும் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News