காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;

Update: 2025-10-02 11:11 GMT
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று(02.10.2025) நடைபெற்ற அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமை வகித்து, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் உதவி இயக்குநர் அருள்செல்வன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News