காந்தி திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜக
157வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெரம்பலூர் பாரத ஜனதா கட்சியினர்;
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தியின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு, பாஜக சார்பில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் சார்பில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் வடக்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் தவசி. அன்பழகன் மற்றும் சிறுவாச்சூர் சிவக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.