தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் குமாரலிங்கம் மகன் செந்தில் (33). இவா், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு 2 மகன்கள், 1 மகள் இருந்த நிலையில், மகள் சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டாராம்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட செந்தில், மகளுடனேயே செல்லப்போகிறேன் எனக் கூறிக் கொண்டே இருந்தாராம். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மீட்டுஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.