சம்மங்கி பயிரிடும் விவசாயி வயலை ஆட்சியர் ஆய்வு
60 எக்டருக்கு 36.00 இலட்சம் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு நடவு பொருள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் இதுவரை 117 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
லாடபுரம் உராட்சியில் அரசின் மானிய உதவியுடன் சம்மங்கி பயிரிடும் விவசாயி வயலை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் தினசரி வருமானத்தை அதிகரிக்கவும், மலர் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், உதிரி மலர்கள் சாகுபடி செய்வதற்கு 1 எக்டருக்கு ரூ.16000/- மானியமாகவும், குமிழ் மலர்கள் சாகுபடி செய்வதற்கு 1 எக்டருக்கு ரூ.60000/- மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. குமிழ் மலர்கள் (சம்மங்கி) சாகுபடி செய்வதற்கு 2021-22 ஆம் ஆண்டில் 5 எக்டர் 3.00 இலட்சம் நிதியிலும், 2022-23 ஆம் ஆண்டில் 20 எக்டர் 12.00 இலட்சம் நிதியிலும், 2023-24 ஆம் ஆண்டில் 10 எக்டர் 6.00இலட்சம் நிதியிலும், 2024-25 ஆம் ஆண்டில் 20 எக்டர் 12.00 இலட்சம் நிதியிலும் மானியம் வழங்கப்பட்டு சம்மங்கி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.நடப்பு நிதியாண்டிற்கு சம்மங்கி சாகுபடி செய்வதற்கு 60 எக்டருக்கு 36.00 இலட்சம் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு நடவு பொருள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் இதுவரை 117 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.