அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-10-03 15:04 GMT
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன்  உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.  இடைப்பாடி சாலை உழவர்  சந்தை  அருகே ,  அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார்.  நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து,  அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்  கூலித்தொழிலாளி தன்ராஜ், 29,  என்பது தெரியவந்தது.

Similar News