பேருந்தில் வந்த  கள்ளக்காதல் ஜோடி குமாரபாளையத்தில்உயிரிழந்தனர்

சேலம் பேருந்தில் வந்த  கள்ளக்காதல் ஜோடி குமாரபாளையத்தில்உயிரிழந்தனர்.;

Update: 2025-10-03 15:24 GMT
ஈரோடு மாவட்டம், கோபி பகுதியை சேர்ந்தவர் ரேவதி, 35. கூலி. இவரது கணவர் ராஜ்குமார், 35, கூலி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமிதா, 40, என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ரேவதி, கணவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார், செப்.29ல் சத்தியமங்கலம் பகுதியில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். இரண்டு நாட்கள் வீடு திரும்பவில்லை. போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.  நேற்றுமுன்தினம் இரவு குமாரபாளையம் பகுதியிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், ரேவதிக்கு போன் செய்து, உங்கள் கணவரும், அவருடன் வந்த பெண் ஒருவரும் மயங்கிய நிலையில் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ளனர் என்று கூற, ரேவதி தன் உறவினர்களுடன் நேரில் வந்தார். போலீசார் விசாரணையில், கோவையிலிருந்து சேலம் பேருந்தில் ஏறிய இவர்கள், மதுவில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. குமாரபாளையம் அருகே வந்த போது, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட பேருந்தை நிறுத்தியுள்ளனர். அங்கு இருவரும் இறங்கி நடந்து சென்ற போது, சுமிதா மயங்கி விழுந்தார். இரவு 09:30 மணியளவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.எச்.க்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் சுமிதா இறந்தார். இதை கண்ட ராஜ்குமார் மயங்கி விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த ராஜ்குமார், நேற்று அதிகாலை 01:30 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரனைஸ் செய்து வருகின்றனர்.

Similar News