தமிழ்நாடு வனத்துறை பெரம்பலூர் வனக்கோட்டம் வனவிலங்கு வார விழா
மனித - யானைகள் இணக்க வாழ்க்கை என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.;
தமிழ்நாடு வனத்துறை பெரம்பலூர் வனக்கோட்டம் வனவிலங்கு வார விழா பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் வனவிலங்கு வார விழாவானது (அக்டோபர் 2 முதல் 8 ஆம் தேதி வரை) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி 04.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட வன அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன், தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வனவிலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் வனவிலங்கு பாதுகாப்பு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. பின்னர் மனித - யானைகள் இணக்க வாழ்க்கை என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் வனச்சரக அலுவலர்,பா.பழனிகுமரன் செய்தார். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வனத்துறைக் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.