சங்கர நாராயணசாமி கோவில் யானையை வனத்துறையினர் ஆய்வு

கோவில் யானையை வனத்துறையினர் ஆய்வு;

Update: 2025-10-04 12:02 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோவிலில் உள்ள 30 வயதான கோமதி யானையின் எடை, உயரம் உட்பட யானையின் வன பாதுகாப்பு படை வனச்சரகர் ராஜ்மோகன் மற்றும் சங்கரன்கோவில் வன ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான வன கால்நடை மருத்துவர் சாந்தகுமார் மற்றும் ஆறுமுகம் உட்பட வனத்துறையினர் பரிசோதித்து இன்று மதியம் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து யானைக்கு என்ன மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதா, நாள் ஒன்றுக்கு எத்தனை முறை குளிக்க வைக்கப்படுகிறது போன்றவைகளை யானைப்பாகனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து இதே போல் சரியான முறையில் பராமரித்து வர தெரிவித்தனர்.

Similar News