கந்தூரி என்னும் அன்னதான விழா

திண்டுக்கல் ஜண்டா மரம் மக்கான் தெருவில் கந்தூரி என்னும் அன்னதான விழா நடைபெற்றது;

Update: 2025-10-05 15:27 GMT
திண்டுக்கல் ஜண்டா மரம் மக்கான் தெரு அருகில் அமைந்துள்ள மார்க்க விளக்க மேடையில் ஹஜ்ரத் முகைதீன் அப்துல் காதர் ஜிலானி ஆண்டகை அன்னவர்களின் மகத்தான 975 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 40-வது வருட தந்தூரி என்னும் அன்னதான விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவானது முகைதீன் ஆண்டகை அரபி பாடசாலை, கந்தூரி விழா கமிட்டியாளர்கள் மற்றும் மகபூபே சுபஹானி இளைஞர் அணி தலைமையில் நடைபெற்றது காலை 6:30 மணி அளவில் கந்தூரி என்னும் அன்னதான விழா தொடங்கப்பட்டு ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் இன பாகுபாடு இன்றி மத நல்லிணக்க விழா போல் நடைபெற்றது இவ்விழாவில் ஆலிம்கள், ஹஜ்ரத்மார்கள் ஏராளமான பொதுமக்கள் அன்னதான விழாவில் கலந்து கொண்டு உணவு வாங்கி சென்றனர் சுமார் 8000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Similar News