கரூரில் நடந்த சம்பவத்தை திமுக அரசியலாக்க கூடாது ஜி கே வாசன்
திராவிட மாடல அரசின் மக்கள் அடியோடு விரித்து வருகின்றனர் கூடிய விரைவில் திராவிட மடல் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்கின்றனர்.;
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை, கடந்த நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை மீதமுள்ள 6 மாதத்தில் அவர்களால் நிறைவேற்ற முடியாது அதற்கு தகுதியற்றவர்களாக அவர்கள் இருப்பதன் காரணமாக அவர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடிய நாள் விரைவாக வந்து விட்டது. இந்த தேர்தலில் அந்த முடிவை வாக்காளர்கள் உறுதியாக எடுப்பார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பெரம்பலூரில் தெரிவித்தார். பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல மாணவரணி சார்பில் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், இனிவரும் 6 மாத காலத்தில் அவர்களால் அதனை நிறைவேற்ற முடியாது என்றும் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை வஞ்சித்துள்ளதாகவும் அவர்கள் முழக்கத்தில் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், கடந்த நான்கரை ஆண்டு காலமாக கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என்பதை, தொடர்ந்து த.மா.கா கண்டித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையிலே இன்றைக்கு பெரம்பலூரிலே மக்கள் விரோத தி.மு.க அரசை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். நான்கரை வருடங்களில் தி.மு.க செய்ய முடியாத, கொடுத்த வாக்குறுதியை செய்ய முடியாததை இனிமேல் 6 மாதத்தில் அவர்களால் செய்ய முடியாது. அதற்கு தகுதியற்றவர்களாக அவர்கள் இருப்பதன் காரணமாக அவர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடிய நாள் விரைவாக வந்து விட்டது. இந்த தேர்தலிலே அந்த முடிவை வாக்காளர்கள் உறுதியாக எடுப்பார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு. அதிலே ஒரு தனி நபர் நீதிபதி விசாரணை நடைபெறுகிறது. அதே நேரத்திலே புலனாய்வுத் துறை விசாரணை ஒரு காவல் துறை உயர் அதிகாரியின் தலைமையிலே நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளி வந்திருக்கிறது. இது நியாயமாக இருக்க வேண்டும் என்றால் இதற்கு இடையிலே ஆட்சியிலே இருந்து கொண்டிருக்கிற அமைச்சர்களும், அவர்களைச் சார்ந்த அதிகாரிகளும், குறிப்பாக தி.மு.க.வினுடைய கூட்டணிக் கட்சிகளும் ஒரே பக்கமாக இட்டுக்கட்டிக்கொண்டு பேசுவது என்பது மக்கள் பார்வை அவர்கள் மீது சந்தேகத்துக்குரிய பார்வையாகவே இருக்கும். எனவே, சட்டம் அனைவருக்கும் பொது. சட்டத்தின் அடிப்படையிலே இந்த நாடு செயல்படுகிறது. அப்படி இருக்கும் போது சட்டம் தன்னுடைய கடமையை செய்யட்டும். அதற்கு இடையிலே ஏன் இந்த இடைஞ்சல்? எதற்காக ஒரு கட்சியின் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்? 41 பேருடைய உயிர் பலி என்பது மிக சோகமானது, வருத்தமானது. உயிர் திரும்பி வராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கட்சி பொறுப்பு என்றால் அன்றைக்கு இருக்கின்ற காவல்துறை என்ன ஆனது என்ற கேள்விக்குறியெல்லாம் எழுகிறது. எனவேதான் இதற்கு விசாரணை தேவை, நடுநிலையான விசாரணை தேவை என்று கூறுகிறோம். இதற்கு இடையிலே குழப்பம் விளைவிக்கும் வகையிலே ஆளுங்கட்சியினரும், கூட்டணிக் கட்சியினரும் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தேகப் பார்வையிலே பார்க்கிறார்கள் என்பதை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். என்றவர், மத்திய அரசு தமிழகத்தை கபாலி கரம் செய்ய பார்க்கிறது, சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை வந்த பிறகு யார் குற்றவாளி என்பது தெரியவரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார என்று கேட்டபோது, தேவையில்லாத சந்தேகங்களை ஆளுங்கட்சியும், அதனுடைய கூட்டணிக் கட்சிகளும் இட்டுக்கட்டிக்கொண்டு பேச வேண்டாம். அதிகாரிகளும் அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது. விசாரணை நடக்கும் போது இதனை மக்கள் விரும்பவில்லை. மக்கள் நடுநிலையான ஒரு விசாரணையை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இடையிலே இவர்கள் பேசுவது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர் பல கலந்து கொண்டனர்.