பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டெருமைகள்
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டெருமைகள் - மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலாபயணி;
திண்டுக்கல் கொடைக்கானலில் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டெருமைகள் திடீரென பேருந்து நிலையத்திற்குள் உலா வந்தது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பதறி ஓடினர். மேலும் சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். சாலையில் முன்பாக சென்ற காட்டெருமையை பார்த்து கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் பின் புறத்தில் வந்த மற்றொரு காட்டெருமையை கண்டு அலறியடித்து ஓடினார், நல்வாய்பாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த சுற்றுலா பயணி திரும்பி பார்த்ததால் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நில பகுதிக்குள் அந்த இரண்டு காட்டெருமைகள் சென்றது.