அதிமுக பயிற்சி பட்டறை குறித்த ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் பூத் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்தல் மற்றும் பயிற்சி பட்டறை குறித்த ஆலோசனைக் கூட்டம்;

Update: 2025-10-07 04:12 GMT
திண்டுக்கல் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக மேற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பாக பூத் வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்தல் மற்றும் பயிற்சி பட்டறை குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மாணிக்கம் மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவிசெல்வம் தங்கம், இணைச்செயலாளர் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரேம்குமார், மேற்கு செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News