திருச்செந்தூரில் வேல் பூஜை – நடிகர் ரஞ்சித் பேட்டி

திருச்செந்தூரில் வேல் பூஜை – நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்தார்;

Update: 2025-10-07 06:10 GMT
திருச்செந்தூரில் வேல் பூஜை – நடிகர் ரஞ்சித் பேட்டி திருச்செந்தூர் கடற்கரையில் தென்தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுடன் கந்தசஷ்டி பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேச ஒற்றுமை, இயற்கை பாதுகாப்பு, விவசாய வளர்ச்சி அவசியம். மத பிளவு இருக்கக் கூடாது,” என்றார். அரசியல் குறித்து கேட்டபோது, “இன்னும் அரசியலுக்கு வரவில்லை. நல்லவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும்; வாய்ப்பு கிடைத்தால் மக்கள் பணி செய்வேன்,” என தெரிவித்தார். கரூர் நிகழ்வை பற்றி அவர், “அது சாதாரணம் அல்ல; 41 உயிர்கள் போயின. வாழ்நாள் முழுவதும் இந்த துக்கம் விஜயை விட்டு போகாது. இதுபோல் சம்பவம் எந்த தலைவனுக்கும் வரக்கூடாது,” என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

Similar News