சுற்றுலா பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து விபத்து
செம்பட்டி அருகே சுற்றுலா பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சி வைரல்;
சென்னையிலிருந்து மூணாறுக்கு 45 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த சிங்காரகோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது இதனால் சுற்றுலா பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்திற்குள் விழுந்து குருமூர்த்தி என்பவர் வீட்டின் மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பேருந்தில் இருந்த 45 பயணிகள் உயிர் தப்பினர். மேற்படி சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்துக்குள்ளான பேருந்து சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.