வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து திமுகவினர் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டனர்.‌;

Update: 2025-10-07 10:12 GMT
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக செயலாளரும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்ருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திமுக சட்டத்துறையின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. கே.எஸ். ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் வழக்கறிஞர் திரு. ராஜா முகமது, தலைமை கழக வழக்கறிஞர் திரு. மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு, மார்க்கண்டேயன், மாநகர மேயர் திரு, ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் திரு. செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் திரு. ராஜ்மோகன் செல்வின், திரு. ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் திரு. சுசி ரவீந்திரன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்ன பாண்டியன், திரு. முருகேசன், திரு. செல்வராஜ், திரு. மும்மூர்த்தி, திரு. R. ராதாகிருஷ்ணன், திரு. காசி விஸ்வநாதன், திரு. நவநீத கண்ணன், திரு சின்ன மாரிமுத்து, திரு. ராதாகிருஷ்ணன், திரு அன்பழகன், திரு. ராமசுப்பு, திரு. இம்மானுவேல், திரு. ஜெய கண்ணன், பேரூர் செயலாளர்கள் திரு. வேலுச்சாமி, திரு. கிருஷ்ணகுமார், திரு சுரேஷ் கண்ணன், திரு. பாரதி கணேசன், திரு. பாலகுமார், திரு. மருதுபாண்டி, மாநகர பகுதி செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. ஜெயக்குமார், திரு. சுரேஷ் குமார், திரு. நிர்மல் ராஜ், திரு. ராமகிருஷ்ணன், திரு. மேகநாதன் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News