பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கனரக வாகனங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2025-10-07 15:48 GMT
குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் உழவர் சந்தை அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கனரக வாகனங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில் நடந்தது. வக்கீல் தங்கவேல் கூறியதாவது: குமாரபாளையம் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில், நடுவில் புகுந்து சந்தைப்பேட்டை, தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், காவல் நிலையம், சினிமா தியேட்டர்கள், பொது வங்கிகள் உள்ளிட்ட மக்கள் நெருக்கமான பகுதிகளில் செல்வதால் பெரிய அளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. சாலைகளில் பெண்களும் குழந்தைகளும் செல்வதற்கு அச்சமூட்டும் வகையில் மிகப்பெரிய கனரக வாகனங்கள் செல்வதை தடை விதிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கனரக வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் விரைவில் நடத்துவது என்றும் உறுதி ஏற்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த கனரக வாகனங்களால் உரிய நேரத்திற்கு அரசு மருத்துவமனைக்கு வர முடியாததால், பல நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் நகர செயலர் சேகர் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் தேவி, நகர தலைவி வாணி, நகர பொதுச்செயலாளர் கலைச்செல்வன், நகர் செயலாளர் விஸ்வநாதன்,முருகேசன், விஸ்வ ஹிந்து பரிஷத் சுகுமார், இந்து முன்னணி பாலாஜி ,சீனியர் காரியகர்த்தா பழனிச்சாமி சரோஜா, சென்னியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். பிரபு நன்றி கூறினார்.

Similar News