திருச்செந்தூர் கோவில் பெயரில் பணம் வசூல்: சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பணம் வசூல் செய்யப்படுவதாக சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உஷாராக இருக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.;

Update: 2025-10-07 16:09 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில் பணம் வசூல் செய்யப்படுவதாக சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உஷாராக இருக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் தினமும் அன்னதானம் வழங்கி வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழாவிற்காக தனிநபர்கள் சிலர், கோவில் பெயரை பயன்படுத்தி அன்னதானத்திற்காக பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் அற்புதமணி, கோவில் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் "சத்குரு சிவா என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்குகளில் பக்தர்களிடம் முறைகேடாக நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருவது தெரிந்தது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Similar News