வடமாநில தொழிலாளி கொலை – டெக்ஸ்செல் நிறுவனம் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வடமாநில தொழிலாளி கொலை – டெக்ஸ்செல் நிறுவனம் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்;
குலசேகரன்பட்டிணத்தில் வடமாநில தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து உடன்குடி அனல் மின் நிலையம் முன்பு 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம். ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மா மாவட்டம் ஜும்ரிதில்லையா கிராமம் மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் பிரசாத் யாதவ் (45). இவர் உடன்குடி அனல்மின் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளராக கடந்த இரு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குலசேகரன்பட்டினம் தருவைகுளம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்த வந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ஜுன்பிரசாத் யாதவ் அவர்களை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு வாலிபர்கள் அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர் வேலை செய்யும் தனியார் நிறுவன அதிகாரி ஜெகதீசன் என்பவருக்கு செல்போன் மூலம் தகராறு ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள இயலாததால் அதிகாரி குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடை பார்க்குக்கு பின்புறம் வைத்து வட மாநில தொழிலாளி கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வடமாநில தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு அவர் பணிபுரியும் நிறுவனம் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவர் புணிபுரிந்த டெக்ஸ்செல் நிறுவன பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் 4500க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளே விடாமல் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் கூடுதல் டிஎஸ்பி மதன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் நாசரேத் வெள்ளரிக்காய் ஊரணியைச் சேர்ந்த மூர்த்திராஜா, குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த முத்துசெல்வன் என 2 வாலிபர்களை குலசேகரன்பட்டினம் போலிசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.