மரியன்னை கல்லூரியில் இரத்ததான முகாம்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.;
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் குழந்தை தெரஸ், முதல்வர் ஜெஸி பெர்னாண்டோ, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சாந்தி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை உரையாற்றினார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் பணியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மனித நேயத்தோடு பிறருக்கு மறுவாழ்வு கொடுக்கும் எண்ணத்தோடு 25 மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். அதன்பின் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.