கிருஷ்ணகிரி: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?
கிருஷ்ணகிரி: மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?;
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? கிருஷ்ணகிரிமின்வாரியம் அறிவிப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அறுந்து விழுந்த மின் கம்பிகளில் கால்நடைகளை கட்டக் கூடாது. இடி, மின்னல் ஏற்படும் போது இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள். டி.வி.க்கு வரும் கேபிளின் தொடர்பை துண்டித்தும் டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தும் மின் கம்பிகளில் மின்வாரிய பணியாளர்கள் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது. மின்மாற்றியில் ப்யூஸ் போயிருப்பின், அதனை சரி செய்ய மின் ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றி பழுது, மின்தடை, மின் விபத்து மற்றும் இடையூறுகளுக்கு உரிய பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.மின்சாரத்தினால் ஏற்படும் தீ விபத்தின் போது, மின்சார சப்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றி மின் விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மன் வாரியம் தெரிவித்துள்ளார்.