பொதுக்கழிப்பிடம் செயல்படாததால் பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் பொதுக்கழிப்பிடம் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்;
. குமாரபாளையம் உடையார்பேட்டை, தம்மண்ணன் வீதி, மேற்கு காலனி ஆகிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ள பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இது நீண்ட நாட்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கழிப்பிடம் செல்ல வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி இந்த பொதுக்கழிப்பிடம் செயல்பட உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்களாக உள்ளனர். காலை நேரத்தில் இயற்க்கை உபாதை கழிக்க வழியில்லாமல் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. பள்ளி மற்றும் கல்லோரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், வயதான பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த கழிப்பிடம் இல்லாமல் பெரும் சிரமமாக உள்ளது. இதனை உடனே செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்கள்.