அதிமுக சார்பில் பயிற்சி பட்டறை
குஜிலியம்பாறையில் அதிமுக சார்பில் பயிற்சி பட்டறை;
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் தலைமை கழக அலுவலகத்தில் இருந்து வந்துள்ள வேடசந்தூர் சட்ட மன்ற தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் சார்பில் பூத்கள் வாரியாக வாட்சப் ஆப் குழுக்கள் அமைத்தல் பயிற்சி பட்டறை மற்றும் திமுக அரசின் திருட்டுகளும் உருட்டுகளும்,துண்டு பிரசுரத்தினை மக்களிடம் திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை கொண்டு சேர்க்க வேண்டிய பணி குறித்த ஆலோசனை கூட்டம் கழக பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் மாணிக்கம், மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கவிசெல்வம் தங்கம், மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் செல்வகுமார், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் VPB.பரமசிவம் ஆகியோர் மேற்பார்வையில் மிக சிறப்பாக நடைபெற்றது.