திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் CKCM-மஹாலில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது;
திண்டுக்கல் பாறைப்பட்டியை அடுத்த CKCM-மஹாலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் , ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை உள்ளிட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பாக முகவர்கள், சார்பு அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.