திமுக அரசை கண்டித்து அதிமுக துண்டு பிரசுரம்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பகுதியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.;

Update: 2025-10-09 09:59 GMT
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பகுதியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர். நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை செயல்படுத்தாத திமுக அரசை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட ஐடி விங் பொறுப்பாளர்கள் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன், தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அசோக்ராஜ், ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரலில் பஜார், காந்தி சிலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து இந்த நான்கரை ஆண்டுகால தமிழக அரசின் அவல நிலைகளை எடுத்துக் கூறியும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி , முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், சொக்கலிங்கம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், ஸ்ரீவை மேற்கு ஒன்றியசெயலாளர் காசிராஜன், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன்,ஏரல் நகரச் செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News