இமானுவேல் சேகரன் பிறந்தநாள்: திமுக கொண்டாட்டம்
தியாகி இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்;
தியாகி இம்மானுவேல் சேகரனின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், நகரத் துணைச் செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அபிராமிநாதன், அண்ணாதுரை, மண்டல தலைவர் நிர்மல் ராஜ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, வைதேகி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.