சடையனேரி கால்வாயில் தடுப்புச் சுவா்: அதிகாரிகள் ஆய்வு

சடையனேரி கால்வாயில் தடுப்புச் சுவா்: அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-10-09 11:25 GMT
வைரவன் தருவை செல்லும் நீா்வழிப் பாதையான புதூா், பொத்தகாலன்விளை பகுதியில் சேதமுற்ற சடையனேரி கால்வாய் தடுப்பு சுவரை சீரமைப்பது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா். புத்தன் தருவை, வைரவம் தருவை ஆகிய குளங்களுக்கு தண்ணீா் வரும் வகையில் சடையனேரி கால்வாய் முதலூா் ஊரணி வழியாக புதூா் வந்து பொத்தகாலன்விளை, கால்வாய் வழியாக வைரவம் தருவை செல்கிறது. இந்த வைரவன் தருவை, புத்தன் தருவை செல்லும் நீா் வழிப் பாதையில் முதலூா் கிராமம் புதூரில் ஊருக்குள் தண்ணீா் செல்லாமல் இருக்க தடுப்புச்சுவா்கள் அமைக்கப்பட்டிருந்தது. அந்தத் தடுப்புச் சுவா்கள் முற்றிலும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதேபோல் பொத்தக்காலன் விளையிலும் மூன்று இடங்களில் படித்துறையும் தடுப்புச் சுவரும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் ஊருக்குள் போகும் அபாயம் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவா் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Similar News