மின்னல் தாக்கி எரிந்த தென்னை மரம் இரு பெண்கள் படுகாயம்
குமாரபாளையம் அருகே மின்னல் தாக்கி எரிந்த தென்னை மரம் இரு பெண்கள் படுகாயம்;
குமாரபாளையம் பகுதியில் மாலை 06:00 மணி முதல் இடி, மின்னல் ஏற்பட்டு வந்தது. சுமார் 06:45 மணியளவில், கோட்டைமேடு,, ஆளவந்தான்காடு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மேல் இடி தாக்கியதில், தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் இருந்ததால், வீட்டில் இரும்பு கட்டில் மீது சாய்ந்து உட்கார்ந்த மீனா, 37, மின்சாரம் தாக்கியது போல் அதிர்ச்சிக்கு ஆளாகி, மயங்கினார். இவரை தீயணைப்பு நிலைய வாகனத்தில் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தென்னை மரம் அருகில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணியாற்றும் சுமதி, 45, இரும்பு தறியின் மீது கை வைத்து இருந்ததால், படுகாயமடைந்தார். இவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் இருவருக்கும் சிகிச்சை செய்து வருகின்றனர்.