காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.;

Update: 2025-10-10 12:03 GMT
காங்கிரஸ் கட்சி சார்பில் குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தி சுமத்தும் குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று கையெழுத்திட்டனர். அனைவருக்கும் தேர்தல் ஆணையம் மீதான ராகுலின் குற்றச்சாட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

Similar News