நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்:

நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!;

Update: 2025-10-10 12:35 GMT
சென்னை அறிவாலயத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் திமுக நிர்வாகிகளை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து பல அறிவுரைகளை வழங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செலயாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News