வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவர் மீது வக்கீல் கிஷோர் சர்மா என்பவர் காலணியை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு;
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவர் மீது வக்கீல் கிஷோர் சர்மா என்பவர் காலணியை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்தும், வக்கீல் கிஷோர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டில்லி சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர்.கவாய்யை அவமானப்படுத்த முயற்சி செய்த நபரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்திடவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 50க்கு மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.