தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
நிலக்கோட்டையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை கல்லூரி முதல்வர் சத்யஸ்ரீ கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்நிகழ்வில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நிலக்கோட்டையில் தொடங்கி மதுரை வத்தலகுண்டு சாலையில் 5 கிலோ மீட்டர் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.