மாணவர்கள் மாயம் காவலர்கள் விசாரணை
அரூரில் 2 பள்ளி மாணவர்கள் மாயம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை;
அரூர் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மகன் ஆரிப்,மேலும் பாபு மகன் ராகேஷ் என இருவரும் 9ஆம் வகுப்பு படிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை ஒரே சைக்கிளில் டியூசன் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளனர். ஆனால், வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் டியூசன் சென்டரில் விசாரித்த போது, அங்கு மாணவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து பல இடங்களில் தேடிய பெற்றோர், நேற்று வெள்ளிக்கிழமை அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்